பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் – இலக்குவனார் திருவள்ளுவன்
உலகில் பண்பிலார் பெருகிவிட்டனர். ஒழுங்கின்மையும் ஊழலும் ஒழுக்கக்கேடும் பெருகிவிட்டன. எனினும் பண்பில் சிறந்தவர்கள் இன்றும் உள்ளனர்! இனியும் இருப்பர்! நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. என்னும் ஔவையார் மூதுரைக்கு(10) இணங்க இத்தகைய சிலரால்தான் பிறர் பயனுறுகின்றனர். இத்தகையோரை நாம் வாழ்வில் சந்தித்திருப்போம்! நானும் பலரைச் சந்தித்துள்ளேன். மறக்க முடியாத அவர்களுள் இருவரைப்பற்றிய நினைவுகளைப் பகிர விரும்புகின்றேன். 1980 ஆம் ஆண்டில் ஒருநாள்!…