திருக்குறள் தமிழ் மக்களின் வாழ்க்கைச் சட்டம்  திருக்குறள் ஒரு தனித்தமிழ் நூல். திருக்குறள் அயற்கொள்கை எதிர்ப்பு நூலேயன்றி எந்த ஓர் அயற்கொள்கையையும் உடன்பட்டுக் கூறும் நூலன்று. தமிழர் வாழ்வே திருக்குறள். திருக்குறளே தமிழர் வாழ்வு என்னும் அவ்வளவு இன்றியமையாச் சிறப்பினையுடைய நூல் திருக்குறள்; உள்ளதை உள்ளபடியே உயரிய முறையில் எடுத்துரைக்கும் உண்மை நூல். தமிழர் வாழ்வின் படப்பிடிப்பு! பழந்தமிழர் நாகரிக நல்வாழ்வை அப்படியே நமக்குக் காட்டும் களங்கமற்ற காலக் கண்ணாடி! தொன்மையும் எதிர்மையும் ஒருங்காய்க் காட்டும் தொலை நோக்காடி! தமிழ் மக்களின் வாழ்க்கைச் சட்டம்!…