குவிகம் இணையவழி அளவளாவல் – 11/10/2020
வாழ்க்கை வாழ்வதற்கே! – ஃபாத்திமா அமீது
வாழ்க்கை வாழ்வதற்கே! துளைக்கப் பட்டோமென்று துவளவில்லை மூங்கில்கள்! மாலையில் வீழ்வோமென்று மலராமல் இல்லைமலர்கள்! வீழ்ந்து விட்டோமென்று விருட்சம் ஆகாமலில்லை விதைகள்! சிதைக்கப் பட்டோமென்று சிலைகள் ஆகாமலில்லை பாறைகள்! சேகரிக்கும்தேன் தனக்கில்லையானாலும் சேர்க்காமல் இருப்பதில்லை தேனீக்கள்! விளைந்ததும் வெட்டப்படுவோம் என்றாலும் விளையாமல் இருப்பதில்லை பயிர்கள்! தோல்விகள், சோதனைகள், ஏமாற்றங்கள், தடங்கல்கள், எதுவாகிலும் தன்னம்பிக்கை கொள்! மாற்றம்வரும் மகிழ்ச்சி தரும், வழிகள்பல திறக்கும், வாழ்வோம் சிறப்போடு, வாழ்க்கை வாழ்வதற்கே! காரைக்குடி ஃபாத்திமா அமீது சார்சா. தரவு: முதுவை இதாயத்து…
முருங்கை மரத்து வேதாளம் ! – உருத்திரா இ பரமசிவன்
முருங்கை மரத்து வேதாளம் ! வாழ்க்கை வாழ்வதற்கே ! வாழ்க்கை என்பது முருங்கை மரத்து வேதாளம் என்று வெட்டி வெட்டி எறிந்தாலும் நம் தோள்மீது அது ஏறிக்கொண்டே தான் இருக்கும். வாழ்க்கையை வெறுப்பது என்பது தான் அந்த வேதாளம். வாழ்க்கையை நோக்கி வரவேற்பு புன்னகை ஒன்றை வீசு எல்லா வேதாளங்களும் அணுக முடியாமல் ஓடியே போய்விடும். இப்போது எல்லா வேதாளங்களும் உன் காலடியில். உருத்திரா இ பரமசிவன்