இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 25: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 24 இன் தொடர்ச்சி) 25 இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு வாழ்த்துக் கவிதைகள் வாழ்த்துக் கவிதைகள் என்ற பொருளில் இருபத்து மூன்று கவிதைகள் இடம் பெறுகின்றன. இக் கவிதையை திருமண வாழ்த்து புலவர் வாழ்த்து பொங்கல் வாழ்த்து தலைவர் வாழ்த்து அன்பர் வாழ்த்து படையல் வாழ்த்து என்று ஆறு பிரிவாகப் பகுக்கலாம். திருமண வாழ்த்துக் கவிதை வரிசையில் மூன்று கவிதைகள் இடம் பெறுகின்றன. அவை அ. கிருட்டிணமூர்த்தி திருமண வாழ்த்து முத்தையா செட்டியார்…