பேராசிரியர் மதியழகி வாழ்க! பேரன்புத் தங்கை மதியழகி வாழ்க!
பேராசிரியர் மதியழகி வாழ்க! பேரன்புத் தங்கை மதியழகி வாழ்க! பல்வித்தகமும் பாங்குறப் பயிற்றும் நல்லாசிரியராய் நற்பணி ஆற்றியும் தமிழ்த்துறைத் தலைவராய்த் தகைமை தாங்கியும் கல்விநிலையக் கனிவுறு முதல்வராய் பல்கலைக்கழகப் பேரவைக் குழுவிலும் கல்லூரி ஆசிரியர் போராட்டத்திலும் முத்திரை பதித்த போராளியாகவும் அயர்விலாப் பணிகள் ஆற்றிய மாண்பு அன்புத்தங்கை மதியழகிக்கே என்றும் உரியது; வாழ்க! வாழ்க! எழுபான் அகவை எய்தும் இந்நாளில் முழுநிறை அன்புடன் வாழ்த்தி மகிழ்கிறேன்! பேராசிரியர் மதியழகி வாழ்க! பேரன்புத்தங்கை மதியழகி வாழ்க! புதல்விகள் இருவரும் பேரனும் பேத்தியும் எல்லா நலனும்…
முனைவர் க.சிரீதரனுக்குத் தமிழ்ச்சான்றோர் விருது – வாழ்த்துப்பா
தமிழகப்புலவர்குழு கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் க. சிரீதரனுக்குத் தமிழ்ச்சான்றோர் விருது வழங்கியது. பங்குனி 07, 2047 / மார்ச்சு 20, 2016 அன்று நடைபெற்ற தமிழகப் புலவர் குழுவின் 107ஆவது கூட்டத்தை முன்னிட்டுப்பிற்பகல் கருத்தரங்கம் நடைபெற்றது. சங்க இலக்கியங்களில் அறம், வீரம், காதல், நட்பு, போன்ற பல்வேறு தலைப்புகளில் தமிழ்ச்சான்றோர்கள் உரையாற்றினர். முனைவர் மறைமலை இலக்குவனார், கவிஞர் பொன்னடியான் வாழ்த்துரையாற்றினர். கி. ஆ. பெ.வி. கதிரேசன் நன்றி நவின்றார். இந்நிகழ்வின் பொழுது . கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் …
பொலிக நும் வினையே!
பொலிக நும் வினையே! இன்றே, பொலிகநும்வினையே, பொலிகநும் வினையே நாணனி கொண்ட நன்னுதல் அரிவைக்கும் பூணணி கொண்ட பொங்குவரை மார்பற்கும் மனையீ ரோதி வாழ்வொடு மல்கிய புனையீ ரோதிக்கும் பொலிக நும் வினையே! – விருத்தியுரைகாரரைப் புகழ்ந்த பாடல்