வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 91-100 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 81-90 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் (குறள்நெறி) 91. விண்ணகத்தாரின் விருந்தினன் ஆக, வந்த விருந்தினரை அனுப்பிப் புது விருந்தினரை எதிர்பார்! 92. அளவிடற்கரிய பெருமை அடைய, விருந்தோம்பு! 93. விருந்தினரைப் பேணாது ஈட்டிய பொருளை இழந்து வருந்தாதே! 94. விருந்தினரைப் பேணா மடமையால், செல்வமிருந்தும் வறுமை யாளனாகாதே! 95. மாறுபட்டுப் பார்த்து விருந்தினரை வாட விடாதே! 96. வஞ்சனையற்ற இன்சொல் கூறி அறவாணனாக விளங்கு! 97. மனமுவந்து கொடுப்பதைவிட மேலான முகமலர்ச்சியாய் இரு! 98. அனைவரிடமும் இன்சொல் கூறித்…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 81-90 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 71-80 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் (குறள்நெறி) 81.அன்பில்லாதவருடன் வாழாதே! 82.புறத்துறுப்புகளால் பயன் வேண்டுமெனில், உள்ளுறுப்பாம் அன்பு கொள்! 83. அன்பில்லாமல் உயிரிருந்தும் பிணமாகாதே! 84.விருந்தினரைப் போற்றி இல்வாழ்க்கை நடத்து! 85. சாவா மருந்தாயினும் விருந்தினருடன் உண்க. 86. விருந்தோம்ப இயலாது வறுமையாளனாகாதே! 87. விருந்தினரைப் போற்றி வருந்தாமல் வாழ்! 88. வீட்டில் திருமகள் வாழ, விருந்தோம்பு! 89. விருந்தினர் உண்டபின் உண்! 90. தேவையெனில், விருந்தினர்க்கு விதையையும் உண்பி!   (தொடரும்) இலக்குவனார்திருவள்ளுவன்

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 21-30 -இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 11-20 இன் தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 21-30 (குறள்நெறி) ஒழுக்கத்தார் பெருமையே உயர்ந்தது என்று போற்று! துறந்தார் பெருமையை அளவிடுவது இறந்தாரை எண்ணுவது போன்றது என அறி! அறம்புரிவார் பெருமை அனைத்திலும் பெருமையுடைத்து என உணர்! அறிவு வலிமையால் ஐம்புலன் காத்திடு! ஐம்புலன் அடக்கி ஆற்றலராக விளங்கு! அரியன செய்து பெரியாராய்த் திகழ்! ஐவகை உணர்வும் அறி.! நல்லுரை மூலம்  நிறைவுடையார் பெருமையைப் பெறு!  குணக்குன்றோர் சீற்றம் நொடிப்பொழுதும் தங்காது என உணர்! “அந்தணர் என்போர்…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 1-10 இலக்குவனார் திருவள்ளுவன்

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 1-10 (குறள்நெறி) எழுத்துக்கு அகரமும் புவிக்குப் பகலவனும் முதல் என அறி! கற்றதன் பயனாக அறிவர்வழி நட! நெடுங்காலம் வாழ மாண்புடையோர் வழி நட! துன்பம் இல்லாதுபோக விருப்பு வெறுப்பிலார் வழிநில்! இருவினை சேராதிருக்கப் புகழுடையார் வழி நில்! நீடு வாழ மெய்யொழுக்கர் வழி நில்! மனக்கவலையை மாற்ற உவமையில்லார் வழிநில்! துன்பக்கடல் நீந்த அறவர்வழி நில்! தலையால் நற்குணத்தானை வணங்கு! அறியாமைக் கடலை நீந்த, ஆளுமையுடையவர் வழி நில்! (தொடரும்) -இலக்குவனார் திருவள்ளுவன் வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்…