இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  04–  சி.இலக்குவனார்

[இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 03 – தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  04 கழகப் புலவர்களும் பிறரும் இயற்றிய பாடல்களையே பிற்காலத்தார் பொருள் பற்றியும், பாவகை பற்றியும், அடிகள் பற்றியும் பல பிரிவுகளாகத் தொகுத்தனர். இவ்வாறு தொகுக்கப்பட்டவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற இரு பிரிவினுள் அடங்கியுள்ளன. எட்டுத்தொகை என்பதனுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை அடங்கும். பத்துப்பாட்டு என்பதனுள் திருமுருகாற்றுப்படை,  பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி,…

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  03 –  சி.இலக்குவனார்

(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 02 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  03 முன்னுரை   `இலக்கியம்’ என்பது தூய தமிழ்ச்சொல். இதனை ‘இலக்கு+இயம்’ எனப் பிரிக்கலாம். இது ‘குறிக்கோளை இயம்புவது’ என்னும் பொருளைத் தருவது. வாழ்வின் குறிக்கோளை வகையுற எடுத்து இயம்புவதே இலக்கியமாகும். ஆகவே, இலக்கியத்தின் துணை கொண்டு அவ் விலக்கியத்திற்குரிய மக்களின் வாழ்வியலை அறிதல் கூடும். தமிழிலக்கியத்தின் துணை கொண்டு தமிழ் மக்களின் வாழ்வியலை அறியலாம்.   தமிழ் மக்களின் வரலாற்றை அறிவதற்குத்…

எக்காலத்திற்கும் ஏற்ற வாழ்வியல் முறைகளைத் திருவள்ளுவர் வகுத்தளித்துள்ளார்

எக்காலத்திற்கும் ஏற்ற வாழ்வியல் முறைகளை நமக்குத் திருவள்ளுவர் வகுத்தளித்துள்ளார்   திருக்குறள் என்னும் உலகப் பொதுமறை, கி.மு. முதலாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட முதுபெரும் படைப்பாகும். அதனில், உலக வாழ்க்கைக்கு வழிகாட்டியாய் உரைக்கப்பட்ட கருத்துகள் இன்றளவும் மிகச் சிறந்த வாழ்வியல் கோட்பாடுகளாக விளங்கி வருவது கண்கூடு. வள்ளுவர் தனது நூலினை அறம், பொருள், இன்பம் என முப்பாலாகப் பிரித்து மக்களுக்கு இக்காலத்திற்கும், பிற்காலத்திற்கும், ஏன், நம்பிக்கை இருக்குமெனின் மேலுலக வாழ்க்கைக்குமெனப் பல்வேறு கருத்துகளை வழிகாட்டு நெறிகளாய், வாழ்வியல் முறைகளாய் வகுத்தளித்துள்ளார். 133 அதிகாரங்களைக் கொண்ட திருக்குறள்…