வாழ்வுநெறி – முனைவர் வ.சுப.மாணிக்கம்.
(அகரமுதல இதழ் நாள்பங்குனி 2,தி.பி. 2045 / மார்ச்சு 16, கி.பி. 2014 தொடர்ச்சி) ஒல்லும் வகையான் அறவினை ஓயாதே செல்லும் வாயெல்லாம் செயல். இக்குறளில் அவர் நெகிழ்ச்சியைப் பாருங்கள். ஒல்லும் வகையான் எனவும், செல்லும் வாய் எனவும் அறஞ்செய்வான் நோக்கத்திற்கு எவ்வளவு தாராளமாக விட்டுக் கொடுக்கின்றார்? தலைமேல் புல்லுக்கட்டை இறக்க உதவுவதும், ஆட்டின் கால் முள்ளை அணைத்து எடுப்பதும், முதியோர்க்கு இடங்கொடுத்து செல்வதும் இவ்வண்டி என வினவினார்க்குச் சலிப்பின்றி அறிவுறுத்தலும் எல்லாமே சிறு வினையாயினும் அறிவினையல்லவா? வள்ளலிடம் சென்றான் வறியனாய்த் திரும்பான்;…