மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் வா.இ.க. / எல்.ஐ.சி. விருது வழங்கும் விழா
தேவகோட்டை- தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் வாணாள் இடரீட்டுக் கழகம்(எல் .ஐ.சி.) சார்பில் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை வா.இ.க./எல்.ஐ.சி.கிளை மேலாளர் மோகன சுந்தரம் மாணவர்களுக்கு விருதுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி இடரீட்டுக் கழகம் .வைரவிழா கொண்டாடுவதைக் குறித்து சிறப்புரையாற்றினார். கிளையின் வளர்ச்சி அதிகாரி தமிழரசு முன்னிலை வகித்தார். இந்திய வாணாள் இடரீட்டு நிறுவனம் தொடர்பாக இராசி என்ற மாணவியும், அதன்…