அரசு மின் சேவை மையம் மூலம் பாடநூல்கள்!
அரசு மின் சேவை மையம் மூலம் பாடநூல்கள் பெறும் வசதி அறிமுகம்! முதல் வகுப்பு முதல் மேனிலை இறுதி வகுப்பு (+2) வரையிலான பாடநூல்களுக்கு மாணவர்கள் அரசு மின் சேவை மையத்தில் பணம் செலுத்திப் பதிவு செய்தால், வீட்டுக்கே அவை அனுப்பி வைக்கப்படும் எனத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தத் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “மாணவர்களுக்குத் தேவையான, முதல் வகுப்பு முதல் மேனிலை இறுதி வகுப்பு வரையிலான பாடநூல்களை இணையவழி…