விகித அடிப்படையிலான சார்பாளர் முறை (விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை) என்றால் என்ன?   தேர்தலில் வேட்பாளர் செலவுத் தொகைக்கு ஆணையம் உச்சவரம்பு இட்டுள்ளது. அதைத் தாண்டி, கணக்கில் காட்டாமல் கோடிக் கோடியாக அள்ளி வீசப்படுகிறது.   இதைக் கட்டுப்படுத்தத் தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் தேவை எனப் பல்வேறு கட்சியினரும் பொதுநல அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.   இப்போது தொகுதி வாரியாக அரசியல் கட்சிகளின் வேட்பாளர் போட்டி என்கிற நடைமுறை உள்ளது. இதில் மாற்றம் செய்து, ‘விகித அடிப்படையிலான சார்பாளர் முறை’ (விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை)…