திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம். 11 நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்.( (திருவள்ளுவர், திருக்குறள் 335)    “நாவை அடக்கி விக்கல் எழுந்து இறப்பு நெருங்கும் முன்னே நல்வினைகள் செய்ய வேண்டும்” என்கிறார் திருவள்ளுவர்.    சுருங்கி விரிந்து சீராக இயங்கும் மறுகம்(உதரவிதானம்), சுருக்கதிர்ச்சியால் கீழிறங்கித் தொண்டை வழியாகக் காற்றை உள்ளிழுக்கிறது….