விக்கிபீடியர்களுக்கான பயிற்சி கடந்த ஒரு மாதமாகத், தமிழ்நாட்டின் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி – பயிற்சி நிறுவனம் (SCERT) மூலமாகத் தமிழ்நாட்டின் 30 மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கான தகவல்,  தொடர்பாடல் நுட்பப் (ICT) பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 50 ஆசிரியர்கள் என்று மொத்தம் 1500 ஆசிரியர்கள் மூன்று நாட்களுக்கு இப்பயிற்சி பெறுகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஒரு முழு நாள் முழுதும் தமிழ் விக்கிப்பீடியாவில் ஆசிரியர்கள் பங்களிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.   மா.க.ஆ.ப.நி.(SCERT) நியமித்த பயிற்றுநர்களுடன், சேலத்தில் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரியும்…