இலக்கிய வீதி : மறுவாசிப்பில் விக்கிரமன் – நிகழ்ச்சிப்படங்கள்
தை 19, 2047 / 02-02-2016 [படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க!]
இலக்கிய வீதி : மறுவாசிப்பில் விக்கிரமன்
அன்புடையீர் வணக்கம்.. இலக்கியவீதியின், இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில், இந்த ஆண்டின் முதல் நிகழ்வாக தை 19, 2047 / 02-02-2016 அன்று மறுவாசிப்பில் விக்கிரமன் உறவும் நட்புமாக வருகை தர வேண்டுகிறேன்! என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்.
வித்தகர் விக்கிரமனை வணங்கிடுவோம்! – தமிழ்த்தேனீ
தமிழேஅடித்தளமாய் எழுத்தேவேள்வியாய், அமுதசுரபியாய், கலைமகளாய், தான் வணங்கத் தமிழ்த்தாயே மகிழும் வண்ணம் தன் எண்ணம் திண்ணமாய்க் கருத்தில் கொண்டே எண்பதிலும் எழுதுகிறார் இளமையாய்க் கலைகள் கொண்டு ஏணியாய்த் தானிருந்து எழுத்தாளர் பலர் தமையே ஏற்றிவிட்டார் எழுத்தால் வாழுகின்ற எண்ணற்ற நலிந்தோர்க்கு இப்போதும் உதவுகின்றார் எட்டாத புகழில்லை, விருதுமில்லை என்றாலும் அயராத ஆர்வமென்னும் நெய் ஊற்றி எழுத்தென்னும் விளக்கேற்றி மகிழ்கின்றார் எண்ணுகின்ற அற்புதங்கள் கைவசமாய்த் தான் கொண்டு கையெழுத்தாய் வடிக்கின்ற வித்தகராம் திருவிக்ரமன் இயலிசை நாடகமாம் முத்தமிழும் கலந்தே வாழும் வித்தகராம் திரிவிக்ரமன் வேம்பு என்னும்…
மயானம் கிடைக்காமல் இன்னலுற்ற விக்கிரமனின் இறுதிச் சடங்கு – மானா பாசுகரன்
மழை பாதிப்பினால் மயானம் கிடைக்காமல் இன்னலுற்ற புகழ்மிகு எழுத்தாளர் விக்கிரமனின் இறுதிச் சடங்கு: சென்னையில் 4 நாள் அவதிக்குப் பிறகு எரியூட்டல் கடந்த 1-ஆம் நாள் புகழ்மிகு எழுத்தாளரும், ‘அமுதசுரபி’ இதழின் முன்னாள் ஆசிரியருமான விக்கிரமன் காலமானார். இவரது உடல், மழை வெள்ளம் காரணமாக உடலை பாதுக்காக்கும் உறைகலன் பேழை கிடைக்காமல், எரியூட்ட மயானம் கிடைக்காமல் 4 நாட்கள் கடும்அவதிக்குப் பிறகு 4- ஆம் நாள் நண்பகல் எரியூட்டப்பட்டது. ‘நந்திபுரத்து நாயகி’, ‘வந்தியத் தேவன் வாள்’ ‘இராசராசன் சபதம்’ முதலான புதினங்களை எழுதியவர்…