விசயேந்திரனைக் கண்டிப்பது ஏன்? – இலக்குவனார் திருவள்ளுவன்
விசயேந்திரனைக் கண்டிப்பது ஏன்? காஞ்சி மாநகருக்குக் களங்கம் எற்படுத்தும் வகையில் அமைந்ததுதான் காமகோடி மடம். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே புகழுறும் மடம் இது. எப்படி ஆரிய மொழியின் காலத்தை முன்னுக்குத்தள்ளி ஏமாற்றுகிறார்களோ – எவ்வாறு தமிழ் இலக்கியங்களைச் சமற்கிருதத்தில் மொழி பெயர்த்துவிட்டு அவற்றைத் தமிழ் இலக்கியக் காலத்திற்கு முந்தையன எனக் காட்டுகின்றார்களோ – அப்படித்தான் இம்மடத்தின் தொன்மைக் கற்பிதமும். பிற மடங்களாலேயே இம்மடம் பிற்பட்டது எனவும் 1821 இல் கும்பகோணத்தில் தொடங்கப்பெற்ற மடமே 1842 இற்குப்பின்னர் காஞ்சிக்கு இடம் பெயர்ந்தது…