தமிழர் நலனுக்காகப் பிறர் குரல் கொடுக்கக்கூடாதா? – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழர் நலனுக்காகப் பிறர் குரல் கொடுக்கக்கூடாதா? ஒருவர் நலனுக்காக மற்றவர் குரல்கொடுக்கக்கூடாது என்பதும் ஓர் இனத்தவரின் நலனுக்காகப் பிற இனத்தவர் குரல் கொடுக்கக்கூடாது என்பதும் அறியாமையல்லவா? இனப்பற்றை ஆரவாரச் செயலாகக் கருதுபவர்கள் அப்படித்தான் அறியாமை மிகுந்தவர்களாக இருக்கின்றனர். சான்றுக்கு ஒன்று பார்ப்போம்! அண்மையில் எழுவர் பேரணிக்காக, வேலூரில் இருந்து சென்னை வரை ஊர்திப்பேரணி நடப்பதாக இருந்ததை அனைவரும் அறிவர்! அந்தப் பேரணிக்குப் பலதரப்பட்டாரும் ஆதரவு தெரிவித்தனர். அதுபோல் நடிகர் விசய்சேதுபதியும் 25 ஆண்டுகளாக அறமுறையின்றி அடைத்துவைக்கப்பட்டிருப்பதைக் கொடுமையாகக் கூறித் தானும்…
ஏழு தமிழர் விடுதலையை வென்றெடுப்போம்! – ஊர்திப்பேரணி
ஏழு தமிழர் விடுதலையை வென்றெடுப்போம்! அனைத்துக் கட்சி இயக்கங்கள் பங்குபெறும் பேரணி! செய்யாத குற்றத்திற்கு 25 ஆண்டுகள் சிறைக்கொட்டடியில் இருக்கும் நம் உறவினர்கள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, இராபர்ட்பயாசு, செயகுமார், இரவிச்சந்திரன் ஆகிய தோழர்களை விடுதலை செய்யக்கோரி வேலூரிலிருந்து சென்னைக் கோட்டை வரை ஊர்திப்பேரணி! 25 ஆண்டுகள் தனிமைச் சிறைவாசம்… விடுப்பு, பிணை இல்லாமல் நீடிக்கும் துன்பம்… ப.சீ.ந.த.ச. (‘தடா’) சட்டம் பொருந்தாது என முடிவுக்கு வந்த நிலையில் ப.சீ.ந.த.ச.(தடா) ஒப்புதல் வாக்குமூலத்தின் கீழ்த் தண்டித்த முரண்… ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்த காவல்…