தோழர் தியாகு எழுதுகிறார் 97 : பதிவுகள் தளத்தில் செவ்வி 4
(தோழர் தியாகு எழுதுகிறார் 96: பதிவுகள் தளத்தில் செவ்வி 3- தொடர்ச்சி) பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 4 அடுத்ததாகத் தேசிய இயக்கத்தில் வரும் இராணுவவாதம் தொடர்பாகப் பார்ப்போம். இராணுவவாதம் என்பது தேசிய விடுதலை இயக்கத்தில் மட்டுமல்ல, குமுகவியத்திலும்( சோசலிசத்திலும்) வந்திருக்கிறது. நிறஒதுக்கலுக்கு எதிரான ஏ.என்.சி.யின் (ஆப்பிரிக்க தேசியப் பே்ராயம்) போராட்டத்தில் கூட வந்திருக்கிறது. மண்டேலா இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார். அரசியல் போராட்டப் பட்டறிவுகளிலிருந்து முதிர்ச்சியடைவதற்கான நீண்ட வாய்ப்பு ஏ.என்.சி.க்கு இருந்தது. ஆனால் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு அம்மாதிரிப் பட்டறிவுகள் இல்லை. நிரம்பவும்…