விடுதலைப் பள்ளு 2017 – இ.பு.ஞானப்பிரகாசன்
விடுதலைப் பள்ளு 2017 [இராகம் – முகாரி; தாளம் – சோற்றுத்தாளம்] பல்லவி ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே! அழகான விடுதலை அடைந்து விட்டோ மென்று ஆடுவோமே! உருவடி-௧ நல்லாரைத் தலைவரென்னும் காலமும் போச்சே! – வெற்று வீணரைக் கொண்டாடும் காலமும் ஆச்சே! – நல் நீதியே பெரிதென்ற காலமும் போச்சே! – சமய, சாதிக்கு வாக்களிக்கும் காலமும் ஆச்சே! ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே! அழகான விடுதலை அடைந்து விட்டோ மென்று ஆடுவோமே! உருவடி-௨ எங்கும் பொதுவரி* என்பதே பேச்சு!…