அக்கினிக் குஞ்சினைத் தமிழினம் தாங்கட்டும்! – புகழேந்தி தங்கராசு
விடுதலையின் முகவரி நகர மறுக்கிற நதியென உறங்குகிற கடற்கரை – வல்வெட்டித்துறை. பேசும் அலைகளின்றி பேராரவாரமின்றி அமைதி காக்கிற அதன் மூச்சுபேச்செல்லாம் விடுதலைப் பெருமூச்சு. அந்தக் கரையில்தான் உயிரெழுத்தின் நீட்சியென அவதரித்தான் அவன்! அந்த ஆயுத எழுத்தின் உக்கிரத்தால்தான் அடங்கிக் கிடந்தது வக்கிர இலங்கை! பிரபாகரன் – என்பது ஒரு மனிதனின் பெயரில்லை… அது விடுதலையின் விலாசம்! எமது இனத்தின் அறுபதாண்டுக் கால அவல வரலாற்றில் பிரபாகரனும் பிரபாகரனின் தோழர்களும் எழுதியது மட்டும்தான் பவள வரலாறு. கையில் ஏந்திய ஆயுதங்களுடன் அவர்கள் மெய்யில் தாங்கிய…