மறக்க முடியுமா? மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்     “தேவதாசி/தேவடியாள் (தேவ அடியாள்) ஆஃகா! என்ன திவ்வியமான திருப்பெயர்கள். தெய்வத்திற்குப் பக்தி சிரத்தையுடன் தொண்டு புரிபவளே தேவதாசி/தேவடியாள்.” “தேவதாசிகளின் மகிமையைத் தெரிந்து சாத்திரங்களைப் புரட்டிப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. யாரையாவது வைய வேண்டுமானால் ‘தேவடியாள் மகனே’ – அஃது ஒன்றே அவர்களுடைய தெய்வீக இலட்சணத்தை வெட்ட வெளிச்சமாக்கி நிற்கிறது”   “சாத்திரிகளைக் காட்டிலும், சத்தியமூர்த்தி சாத்திரிகள் ‘தேவதாசிகள் இருக்க வேண்டும், தேவதாசி முறையை ஒழிப்பது தெய்வ விரோதம்-சட்ட விரோதம்’ என்று கூச்சல் போட்டுப்…