மெய்யறம் (மாணவரியல்) [வ. உ. சிதம்பரம்(பிள்ளை) கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூல்.]  2. விதியியல் அறிதல் 11. வினையின் விளைவே விதியென வந்துறும். நாம் செய்யும் செயல்களின் விளைவே நம்முடைய விதியாகி நம்மிடம் வந்து சேரும். விதிசெய் கர்த்தா வினைசெய் யுயிரே. ஆதலால் விதியைச் செய்யக்கூடிய மூலப்பொருள் செயல்களைச் செய்யக்கூடிய உயிரே ஆகும். மெய்ப்பொருள் வினையை விளைத்துயிர்க் கீயும். இறைவன் வினைகளின் விளைவை உயிர்களுக்குக் கொடுக்கிறோம். தீவினை விளைவிற் சேருவ துன்பம். தீவினைகளால் துன்பமே வந்து சேரும். நல்வினை விளைவி னணுகுவ…