விதைக்க மறந்த மனித நேயம் – கு. நா. கவின்முருகு
விதைக்க மறந்த மனித நேயம் எந்தேசம் எங்கேபோ கிறது சொல்லு இழிநோக்கி நகரத்தான் மனிதம் என்றா சந்தையெனக் கல்வியாகித் திருட்டுக் கொள்ளை சாதிமதச் சண்டைகளும் மனிதம் கொல்ல எந்தத்திசை போகிறது மக்கள் கூட்டம் ஏனிந்த மிருகத்தோல் மனிதன் போட்டான் வந்துதிக்கும் சூரியனும் மதங்கள் சாதி மனிதனிலே பார்த்துத்தானோ இனியும் தோன்றும்? உடன்பிறந்து வாழ்ந்துவரும் உனது இரத்தம் ஊன்தின்னி யென்றான வேங்கை யர்கள் தடம்பதிக்க அறிவுகொள்ள கல்வி உண்டு சாக்கடையில் கரைத்துவிட்டான் கற்ற யெல்லாம் வடம்பிடித்து இழுப்பாரோ இனியும் நாட்டை வளங்காண மனிதநேயம் பெருகி யோட…
பூமித்தாயே / உணவை மாற்று 2020, திருச்சிராப்பள்ளி
தை 16 & 17, 2047 / சனவரி 30 & 31, 2016 இயற்கை வேளாண் திருவிழா மூலிகை,விதை,சிறுதானிய உணவுக் கண்காட்சி