கலைச்சொல் தெளிவோம் 16: விந்துச்சுரப்பி – Prostate
16: விந்துச்சுரப்பி – Prostate [பிராசுடேட்(prostate) என்பதற்கு உரிய தமிழ்ச்சொல் என்ன என்று திரு நாகராசன் திருமலை(ப்பிள்ளை) கேட்ட வினாவிற்கான விடையிது.] பிராசுடேட் சுரப்பி சிறுநீர்ப்பைக்குக் கீழே ஆண்குறியின் மேற்புறம் சிறுநீர்க்குழாய் (urethra) தொடங்கும் இடத்தருகே இச்சுரப்பி உள்ளது. நெல்லிக்காய் அளவு உள்ள இதன் எடை 7 முதல் 16கல்(கிராம்) ஆகும். இதன் வேலை ஆண் உயிரணுக்களைக் கொண்ட விந்துவின் அளவை அதிகரிக்கும் திரவங்களைச் சுரப்பதாகும். ஒருசார் ஆண்களுக்கு 50 அகவை கடந்த நிலையில் விந்துச்சுரப்பி விரிவடைகின்றது. இதனால் சிறுநீர் வரும்…