திருக்குறள் அறுசொல் உரை – 066. வினைத்தூய்மை : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 065. சொல்வன்மை தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 066. வினைத் தூய்மை செயற்பாடுகளில் குற்றம் குறைகள் இல்லாமை; தூய்மை உள்ளமை. துணைநலம், ஆக்கம் தரூஉம்; வினைநலம், வேண்டிய எல்லாம் தரும். நலத்துணை முன்னேற்றத்திற்கு உதவும்; நலச்செயல் எல்லாமும் தரும். என்றும் ஒருவுதல் வேண்டும், புகழொடு நன்றி பயவா வினை. புகழோடு, நன்மை தராச்செயலை, எப்போதும் விலக்கல் வேண்டும். ஓஒதல் வேண்டும், ஒளிமாழ்கும் செய்வினை, ஆஅதும் என்னும் அவர். …