தமிழகத்திற்கு இராகுல் வருகையும் மானக்கேடர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழகத்திற்கு இராகுல் வருகையும் மானக்கேடர்களும் நேற்று(ஆடி 09, 2046 / சூலை 25,2015 சனிக்கிழமை இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரை) வாகைத்தொலைக்காட்சியாகிய ‘வின் டிவி’ என்னும் தொலைக்காட்சியில் எழுத்தாளர், தொகுப்பாளர், செவ்வியாளர் நிசந்தன் வழங்கும் ‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றேன். இதில், இராகுல் திருச்சிராப்பள்ளி வருகையின்பொழுது பேசிய மதுவிலக்கு தொடர்பான அரசியல் உரையாடல் நிகழ்ந்தது. இவற்றுள் மதுவிலக்கு நினைவுகள்பற்றித் தனியாகவும், மதுவிலக்குக் கொள்கைபற்றித் தனியாகவும் எழுத உள்ளேன். இராகுல் வருகைபற்றி மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்….