கலைச்சொல் தெளிவோம் 38 : விரலி – villus
விரலி – villus விரல்(62), விரல(1), விரலன்(1) ஆகியன சங்க இலக்கியச் சொற்களே. விரல் என்னும் சொல்லின் அடிப்படையில் கலைச்சொல் ஒன்றை உருவாக்கலாம. இதனைத்துணைச் சொல்லாகக் கொண்டு வேறு கலைச் சொற்களையும் உருவாக்கலாம். நம் உடலில் விரல்போன்ற அமைப்பை உடைய உறுப்பு உள்ளது. அதனை விரலி எனலாம். குடலில் அமைந்த இந்த உறுப்பின் பெயர் குடல் விரலி. மிக நுண்ணியதாக அமைந்த விரலி நுண்விரலி. வில்லி/ villi என்றால் குடலுறிஞ்சிகள் (மீனியல்), குடல் பால் குழல்கள்(வேளாணியல்), சிறுகுடல் விரல்கள்(மனையியல்), நுண்விரல்கள் (மருந்தியல்), குடற்பகுதி…