விரலில் வைக்கும் புள்ளியே விடிவெள்ளியாகும்! – உருத்ரா
விரலில் வைக்கும் புள்ளியே விடிவெள்ளியாகும்! நாட்கள் நெருங்கி விட்டனவே. அறிவு மிகுந்தோர் சிந்தனை செய்வீர். உள்ளம் உடையார் வெள்ளமெனப் பெருகுவீர். உணர்வு கேட்கும் வெளிச்சம் காண இருள் மறைப்புகள் விலக்குவீர் விலக்குவீர். பொருளாய் பணமாய்ப் பாதை தடுக்கும் பாதகம் மறுப்பீர். தாயின் மணிக்கொடி பேய்களின் கையிலா? மக்கள் தத்துவம் மறைந்து போக தனிமனிதப் புள்ளிகள் நம்முள் பூதமாய் இங்கு நிழல்கள் காட்டும். பொது சமுதாயப் புனிதம் காக்க கோவிலும் வேண்டா கடவுளும் வேண்டா! சாதியும் வேண்டா சதிகளும் வேண்டா! உழைக்கும் ஒவ்வொரு கரத்திலும் காண்பீர்…