திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 009. விருந்து ஓம்பல்
(அதிகாரம் 008. அன்பு உடைமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல் அதிகாரம் 009. விருந்து ஓம்பல் உறுபசியுடன் வருகின்ற எவருக்கும், விருந்து படைத்தலும் உதவுதலும். இருந்(து)ஓம்பி, இல்வாழ்வ(து) எல்லாம், விருந்(து)ஓம்பி, வேள்ஆண்மை செய்தல் பொருட்டு. இல்வாழ்தல், விருந்தினரைக் காக்கவும், நல்உதவி செய்யவுமே ஆகும். விருந்து புறத்த(து)ஆத், தான்உண்டல், சாவா மருந்(து)எனினும், வேண்டல்பாற்(று) அன்று. விருந்தாளர் வெளியில்; சாவினை நீக்கும்…