அனைவருக்கும் வணக்கங்கள், சென்ற ஆண்டின் இறுதியில், நாம் உருவாக்கிய விருபா வளர் தமிழ் : நிகண்டு என்னும் செயலியின் துணையுடன் சிந்தாமணி நிகண்டு மின்-அகராதியினை இணையத்தில் இணைத்திருந்தோம். இதனை நீங்கள்  http://www.viruba.com/Nigandu/Chintamani_Nigandu.aspx என்ற இணைய முகவரியில் பார்வையிடலாம். சிந்தாமணி நிகண்டில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு சொற்களுக்கும் தனித்தனியான இணைய முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. சிந்தாமணி நிகண்டு மின் அகராதியில் தலைச்சொற்கள், பொருள் விளக்கச் சொற்கள் இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் அகரவரிசையில் தரப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 2015.08.03 அன்று, வடசொற்களுக்குத் தமிழ்ப் பொருள் கூறும் அகராதியான வடசொல் தமிழ்…