அரசியல் ஆதாயம் தேடாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையாக உதவுக: அரசுக்கு விசயகாந்து வேண்டுகோள்!   அதிமுகவினர் துயர்துடைப்புப்பணி செய்வதுபோன்று படம்காட்டுவதை நிறுத்திவிட்டு, அரசியல் ஆதாயம் தேடாமல், மனிதாபிமானத்தோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று தேமுதிக தலைவர் விசயகாந்து கூறியுள்ளார்.   இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் கோரதாண்டவத்தால், சென்னை, புறநகர்ப் பகுதிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வெள்ளக்காடாக மிதக்கின்ற நிலையில், தற்போதைய முதன்மைத் தேவை மழைநீரை வடியச் செய்வதும், செய்வதறியாது திகைத்து நிற்கின்ற பொதுமக்களுக்குக்…