அகநானூற்றில் ஊர்கள் :7/7 – தி. இராதா
(அகநானூற்றில் ஊர்கள் 6/7 இன் தொடர்ச்சி அகநானூற்றில் ஊர்கள் -7/7 வல்லம் மழைபோல் செரியும் அம்பனையும், மேகம் போன்ற தோற்கிடுகினையும் உடைய சோழரது அரண் கொண்டது வல்லம் எனும் ஊராகும். “……………..சோழர் வில்ஈண்டு குறும்பின் வல்லத்துப் புரமிளை” (அகநானூறு 336) “நெடுங்கதி நெல்லின் வல்லம்” (அகநானூறு 356) நெல்வளம் மிக்க ஊர் வல்லம் என்பதை மேற்கண்ட அடிகள் விளக்குகின்றன. வாகை வாகை மரம் நிற்றலால் வாகைப் பெருந்துறை எனப்பட்டது. வாகைப்போர்…