கல்வெட்டில் முதல்திருக்குறள்
சென்னை குறள்மலைச்சங்கம் சார்பில், ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகில்உள்ள மலையப்பாளையத்தில் உள்ள உதயகிரி முத்துவேலாயுதசாமி கோவிலில் கல்வெட்டில் முதல்திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. 2047 ஆனி 19 / 2016 சூலை அன்று கல்வெட்டில் முதல் குறள் திறப்பு விழா நடைபெற்றது. இவ் விழாவில் இ.வி.ஆ.மை.(இசுரோ) இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை கலந்து கொண்டு கல்வெட்டில் முதல் திருக்குறளை அறங்கேற்றம் செய்து பேசினார். திருக்குறளை நாள்தோறும் படிக்க வேண்டும். அதைப்புரிந்து கொண்டு, அதன்படி நாம்வாழ்க்கையில் வாழ வேண்டும். இங்கே திருக்குறள் கல்லில் பதியப்பட்டிருப்பது போல்,…