தமிழால் முடியாதா? – புலவர் வி.பொ. பழனிவேலனார்
இற்றை ஞான்று தமிழுக்கும் தமிழ் நாகரிகம், பண்பாட்டுக்கும் வந்து கொண்டிருக்கின்றன இடையூறுகள் பல. சமற்கிருதத்தால் தமிழ் அடைந்த கேட்டைச் சரி செய்ய இன்னும் நம்மால் இயலவில்லை. எது தமிழ்ச் சொல். எது சமற்கிருதச் சொல் என்று வேறுபடுத்திக் காண்பது தமிழ்ப் பெரும் புலவர்களால் கூட முடியவில்லை. அடுத்து ஆங்கிலம் வந்தது. அதனால் பல தீந்தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்தன. இன்று தமிழ்ப் பேராசிரியர்கள் கூடத் தனித் தமிழில் பேசவோ எழுதவோ இயலாதவர்களாயுளர். தமிழ் வகுப்பில் விளக்கங் கேட்டால் ஆங்கிலத்தில் கூறுகிற அளவுக்கு மொழியறிவு குன்றி விட்டது…
தமிழுக்குக் கல்லறை கட்டப்பட்டுவிட்டது…? – புலவர் வி.பொ.பழனிவேலன், பி.ஓ.எல்
‘இந்தி’ கட்டாயமில்லை என்று நடுவண் அரசும் அதற்கு ஒத்து ஊதிக் கொண்டு தமிழ்நாட்டு அரசும் (இல்லை, தப்பு, தப்பு, சென்னை ராச்யமும்) இந்தியைத் தமிழ்நாட்டில் நுழைக்கும் பணியில் வெற்றி பெற்றுவிட்டன. 1. தமிழ்நாடு என்று பெயரிடத் தமிழக அரசு மறுத்துவிட்டது. அமைச்சர் ஒருவர், ‘மெட்ராசு ஃச்டேட்’ என்பது இரண்டு ஆண்டுக்கு முன்னரே எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது; ஆதலால் அது தீர்ந்துபோன செய்தி; இனி அதைப்பற்றிப் பேசத் தேவையில்லை என்று வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார். 2. தமிழ் நாட்டுக் கல்விக் கூடங்களில் பாடம் பயிற்று மொழியாகவிருக்கத்…