11 ஆண்டு கடந்தும் முழுமை பெறா புதுமயில் தோட்ட வீடமைப்புத் திட்டம்
வீடுகள் எரிந்து 11 ஆண்டுகள் கடந்தும் முழுமை பெறாத புதுமயில் (New Peacock)தோட்ட மக்களின் வீடமைப்புத் திட்டம் நேர்ச்சிகள்(விபத்துகள்), பேரழிவுகள், எதிர்பாராமல் நேர்பவை, இவற்றால் பாதிக்கப்பட்டு வீடுகள், உடைமைகளை இழந்தவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்தாலும் ஏனைய அமைப்புகளாலும் பல்வேறு உதவிகள், துயரீடுகள் வழங்கப்படுகின்றன. மலையகத்திலும் பல்வேறு பேரழிவுகள்பேரழிவு, நேர்ச்சிகள் ஏற்படுகின்றன. எனினும் தோட்ட மக்களை துயரீட்டுப்பொருள்கள், உதவிகள் உரிய வகையில் சென்றடைவதில்லை. பேரிடர்கள், நேர்ச்சிகள் ஏற்படுகின்ற சூழல்களில் பாதிக்கப் பட்டவர்களுக்குப் பலதரப்பட்ட உதவிகள், துயரீடுகள் கொடுக்கப்படுகின்றன என்பதை மறுப்பதில்லை. எனினும் பாதிக்கப்பட்டவர்கள் நிலையாக…