வட்டுக்கோட்டை இந்துஇளைஞர் சங்கத்தின் வீடமைப்பு அன்பளிப்பு
வட்டுக்கோட்டை இந்துஇளைஞர் சங்கத்தினால் வீடு சீரமைப்பிற்காக உரூ.50,000 பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு வட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்) சங்கத்தினால் கடந்தகாலப்போரில் தன் இரு கண்களையும் இழந்து நான்கு பிள்ளைகளுடன் பல இன்னல்களுடன் வாழ்ந்து வரும் கீரிமலை வீதி சித்தங்கேணியைச் சேர்ந்த மா.குணரத்தினம் என்பவருக்கு இவ் வீடு சீரமைப்பிற்கான உதவி (சித்திரை 24, 2047 / மே7,2016) வழங்கப்பட்டுள்ளது. மா.குணரத்தினம் வட்டுக்கோட்டை இந்து இளைஞர் சங்கத்திடம் விண்ணப்பம் விடுத்திருந்தார். இதன்படி, வீடு சீரமைப்பிற்காக அவரது வீட்டில் சனிக்கிழமை(7/05/2016), கூரைத்தகடுகள், காரைக்குழாய்கள், கம்பிகள், வீட்டுவேலைகளுக்கான கூலி…