இளம்பெண்களைச் சிதைக்கும் ‘சுமங்கலித் திட்டம்’
பேராசைப் பசிக்கு இரையாகும் இளம்பெண்கள் தமிழக அரசு தொழிலாளர் நலத்துறையின் அறிக்கைப்படி 38,000 இளம் பெண்கள், தொழிற்சங்கச் சார்பாளர்கள், தொண்டு நிறுவனங்களின் கணக்குப்படி 4 நூறாயிரம் இளம் பெண்கள், ‘சுமங்கலித் திட்டம்’ என்கின்ற பெயரில் அதிக வேலைக்குக் குறைவான சம்பளம், கூடுதல் நேர வேலைக்குக் கூடுதல் சம்பளமின்மை, கட்டயாப்படுத்தி வேலை, தொழிற்சங்க உரிமை மறுப்பு, குறைவான தூக்கம், உடல் சோர்வு, பாலியல் தொந்தரவு போன்ற வன்கொடுமைகளில் வதைக்கப்படுகின்றனர். இன்றைய சூழலில் வேளாண் கூலிகளை விடவும் பஞ்சாலைக் கூலிகள்தான் அதிகளவில் உள்ளனர் என்பது…