(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 17 : பேர் தெரியாப் பெருவீரர் – தொடர்ச்சி) தமிழர் வீரம்வீரப் புகழ்மாலை வீரமும் ஈரமும்தமிழ் நாட்டுக் கவிகள் எஞ்ஞான்றும் படைத்திறத்தையும் கொடைத் திறத்தையும் பாராட்டிப் பாடுவர். “பேராண்மையும் ஊராண்மையும் உடையவர் மேலோர்; அவரே புகழத் தக்கவர். வீரமும் ஈரமும் அற்றவர் கீழோர். அன்னாரைப் பாடுதல் கவிதைக்கு இழுக்கு; நாவிற்கு அழுக்கு” என்பது அவர் கொள்கை. ஔவையாரும் செல்வரும்புலமையுலகத்தில் ஔவையாருக்குத் தனிப்பெருமை உண்டு. “ஔவை வாக்குத் தெய்வ வாக்கு” என்று கருதப் பட்டது. ஆதலால், அரசரும் செல்வரும் அவர்…