தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 7/17
(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 6/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி : 7/17 அடையும் எளியவர்கட்(கு) அகமகிழ்ந்தே கொடுக்கும்கொடையிற் சிறந்தவர்நற் குணத்தமிழர் அம்மானைகொடையிற் சிறந்தவர்நற் குணத்தமிழ ராமாயின்படையின்றி அவர்பொருளைப் பறிக்கலாமே அம்மானைபறித்துபறித்(து) அயலார்கள் பரவினர்காண் அம்மானை (31) மருந்தா யினும்தமிழ் மக்கள் பிறர்க்களித்துவிருந்தோம்பும் வேளாண்மை விரும்புபவர் அம்மானைவிருந்தோம்பும் வேளாண்மை விரும்பிமிகச் செய்திடினேவருந்திப்பின் வறுமையால் வாடாரோ அம்மானைஅவ்வருத்தம் அவர்கட்கோர் அணிகலமாம் அம்மானை (32) பொன்னான நம்தமிழர், புல்லிய எண்ணமுடன்இன்னாமை செய்தார்க்கும் இனிமை…
வீரம் நிறைந்த தமிழினமே! சோரம் போகலாமா? – ஈழத்து நிலவன்
வீரம் நிறைந்த தமிழினமே! சோரம் போகலாமா? உரக்கச் சொல்வோம் எங்கள் உரிமையை! உறுதியாய்க் கேட்போம் எங்கள் விடுதலையை ! தென்தமிழீழத்தில் கிழக்கு மாகாணத்தில் மட்டு நகரில் தை 8 / சனவரி 21ஆம் நாள் சனிக்கிழமை ‘எழுக தமிழ்‘ நிகழ்வு நடைபெறவுள்ளது. இது காலத்தின் ஒரு முதன்மையான வரலாற்றுக் கடமையாகும். சிங்களப் பேரினவாதிகள் அரச ஆதரவோடு கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்க்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் அனைத்துத் தமிழ் மக்களும் எமது ஆதரவை நல்குவோமாக! அம்பாறை, திருகோணமலை,…
கூனுமா தமிழன் வீரம்? – காசி ஆனந்தன்
தமிழ்க்குலம் புயலாய் மாறும்! தூற்றினார் தமிழை என்னும் துடித்திடும் சேதி கேட்டு மாற்றலர் மண்ணில் பாய்ந்து மானத்தைக் கல்லாய் மாற்றி ஏற்றினான் சேரன் ஆங்கே எதிரியின் தலைமீ தென்ற கூற்றினைக் கேட்ட பின்னும் கூனுமோ தமிழன் வீரம்? பறித்திடத் தமிழன் மண்ணைப் பரங்கியர் வந்த வேளை தறித்தவர் தலைகள் கொய்து தன்வலி காட்டி நின்ற மறப்புலித் தேவன் வீரன் மரபினில் வந்த நம்மோர் துரத்துது குண்டென் றாலும் துணிவிழந் தோடுவாரோ? உற்றசெந் தமிழி னத்தை ஒழித்திட முரசம் ஆர்த்த துட்டகை முனுவின் கொட்டம் தூள்படச்…