கலைச்சொல் 160. விலங்கு வெருளி-Zoophobia  விலங்கு என்றால் குறுக்காக அமைதல் என்று பொருள். மக்கள் இனம் போல் நேராக இல்லாமல் குறுக்காக அமைந்த உயிரினமே விலங்கு எனப்பட்டது. விலங்கு என்பதன் மூலப் பொருளிலும் விலங்கினம் என்னும் பொருளிலும் ஆக 38 இடங்களில் விலங்கு என்னும் சொல்லைச் சங்கப்புலவர்கள் கையாண்டுள்ளனர். விலங்குகள், பறவைகள் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய விலங்கு வெருளி-Zoophobia கலைச்சொல்  161. வீழ்பு வெருளி-Basophobia/Basiphobia  சங்கப்பாடல்களில் விழு(85) சிறப்பினைக் குறித்தாலும், வீழ்வதையும் குறிக்கின்றது. விழுந்த மாரிப் பெருந் தண் சாரல…