(அதிகாரம் 030. வாய்மை தொடர்ச்சி) 01. அறத்துப் பால்  03. துறவற இயல்   அதிகாரம் 031. வெகுளாமை எப்போதும், எவரிடத்தும், எதற்காகவும், சினமோ, சீற்றமோ கொள்ளாமை.     செல்இடத்துக் காப்பான், சினம்காப்பான்; அல்இடத்துக்      காக்கின்என்? காவாக்கால் என்?       செல்இடத்தில் சினம்அடக்கு; செல்லா        இடத்தில் அடக்கு; அடக்காமல்போ.   செல்லா இடத்தும் சினம்தீ(து); செல்இடத்தும்      இல்,அதனின் தீய பிற.     செல்இடத்தும், செல்லா இடத்தும்,        சினத்தலைவிடத், தீயது வே[று]இல்லை.   மறத்தல் வெகுளியை, யார்மாட்டும்;…