தேவதானப்பட்டியில் தடை செய்யப்பட்ட வெடிகள் மிகு விற்பனை
தேவதானப்பட்டியில் தடை செய்யப்பட்ட வெடிகள் மிகு விற்பனை தேவதானப்பட்டியில் கையால் தயாரிக்கப்படும் வெடிமருந்துகள் வீடுகளில் பதுக்கி வைக்கப்படுவதால் கண்டம்(அபாயம்) ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடைபெறும் திருமணம், பூப்புனித நீராட்டுவிழா, வசந்தவிழா, இறப்புச்சடங்கு, புதுமனை புகுவிழா போன்ற நிகழ்ச்சிகளில் வெடிவகைகள் வெடிக்கப்படுகின்றன. இவ்வெடிகள் உரிமமின்றி உருவாக்கப்படுவை ஆகும். சோழவந்தான், உசிலம்பட்டி, வடக்கம்பட்டி பகுதிகளில் இருந்து இம்மாதிரியான வெடிகளை வாங்கிவந்து அளவுக்கதிமான கருமருந்துகளை ஏற்றி வெடிக்கச்செய்கின்றனர். இவ்வாறு வெடிகள் அளவுக்கதிமாக அரசு வரையறுத்துள்ள விகித அளவைவிட அதிகமான சத்தத்துடன்…