வெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக! – இலக்குவனார் திருவள்ளுவன்
வெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக! உலகெங்கும் உள்ள சட்டத்தின் ஆட்சியில் தண்டனை பெற்றவர்களைத் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே விடுதலை செய்வதும் ஒரு பகுதியாகும். அண்மையில் இலங்கையில் ‘புத்தபூர்ணிமா’ எனப்படும் வைகாசி விசாகச் சிறப்பு நாளில் 762 தண்டனைவாசிகளை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது ஓர் எடுத்துக்காட்டாகும். இதை எல்லாம் அறியாமல் அடிக்கடிச் சிலர் “கொலையாளிகளை விடுதலை செய்யலாமா” என்கின்றனர். எழுவர் விடுதலைக்கு நீதிமன்றம் குறுக்கே நிற்கவில்லை. ஏனெனில் தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்வதில் அது தலையிடாது. அவ்வாறிருக்க ஆளுநர் தமிழக அரசின் முடிவுகளுக்கு எதிராகவும் நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு…