யாப்பரங்கம் -2 பாவலர்களின் உயர்வு
யாப்பரங்கம் -2 : பாவலர்களின் உயர்வு ஆறடிஆசிரியப் பா நிலைமண்டில ஆசிரியப் பா இயற்றுங்கள். ‘வெல்லும் துாயதமிழ்’ வெளியிடும். ஓர் அடியில் நான்கு சீர்கள் இருப்பதுபோல் ஆறடிகளிலும் நான்கு நான்கு சீர்கள் அமைத்து இயற்றப்படுவது நிலைமண்டில ஆசிரியப் பா இயன்றவரை எதுகை மோனைகளை மிகுதியாகப் பயன்படுத்திப் பாடலைப்புனையுங்கள். பாடலின் இறுதிச்சீர் ஏ,என்,ஓ,க என்று முடிய வேண்டும். தலைப்பு – பசுமைச் சாலை ஆவணி 04, 2049 / 20.8.2018க்குள் கிடைக்குமாறு அனுப்புக. தொடர்பு எண் 97 91 62 99 79 மின்அஞ்சல் vtthamizh@gmail.com முகவரி…
அறவாணர் அருவினை விருதாளர் அருந்தமிழ்ப்பாவலர் தமிழமல்லன் வாழ்கவே!
அறிஞர் முனைவர் க.ப.அறவாணன் தலைமையில் இயங்கும் அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை இவ்வாண்டு ‘அறவாணர் சாதனை விருதினை’, அருந்தமிழ்ப்பாவலர் தமிழமல்லனுக்கு வழங்குகிறது. புதுவைக்குயில் வழியிலான தனித்தமிழ்ப்பாவலர் தமிழமல்லனுக்கு இவ்விருது வழங்குவது பெரிதும் பொருத்தமுடைத்து. ஆடி 24, 2045/9.8.2014 காலையில் சென்னைத் தமிழ்க் கோட்டத்தில் நடைபெறும் விழாவில் அனைத்திந்திய இவ் விருது வழங்கப்படுகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னைத்துணைவேந்தர் முனைவர் மு.தங்கராசு முனைவர் க.தமிழமல்லன் அவர்களுக்கு விருது வழங்கி வாழ்த்துகிறார். பிறப்பு புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் திரு.பொ.கண்ணையன், திருவாட்டி க.தனலட்சுமி ஆகியோரின் அருந்தவப்புதல்வராக ஆனி…