இலக்கணப் பாவலர்கள் குறிப்புத் தொகுப்பு

இலக்கணப் பாவலர்கள் குறிப்புத் தொகுப்பு பாவலர்களுக்கு ஓர் அரிய  வாய்ப்பு இலக்கணத் தோடு பாடல் இயற்றும் பாவலர்கள் குறிப்புத் தொகுப்பு ஒன்றை ‘வெல்லும் தூயதமிழ்’ மாத இதழ் வெளியிடவிருக்கிறது. இத் தொகுப்பில் இடம் பெறப் பின்வரும் விவரங்களை அனுப்புக: பெயர் முகவரி கைப்பேசி தொலைப்பேசி மின்னஞ்சல் வெளியிட்ட நுால்கள் பெற்ற பரிசுகள் பயன்படுத்திய யாப்பு வகை பங்குபெற்ற பாட்டரங்கம் இடம்பெற்றுள்ள கட்செவிக்குழு முகவரி உங்கள் படத்தை இணைத்து அனுப்புங்கள் முகவரி: முனைவர் க.தமிழமல்லன், ஆசிரியர், ‘வெல்லும் தூயதமிழ்’ 66 மா.கோ தெரு தட்டாஞ்சாவடி புதுச்சேரி-605009…

வாயிலுக்கு வெளியேதான் ஓட வேண்டும்! – க.தமிழமல்லன்

என்நாட்டில் என்மொழியி்ல் எல்லாம் செய்வேன் எவன்தடுப்பான்? முன்வரட்டும் எலிபோல் சாவான்! என்வீட்டில் நான் பேசி வாழ்வ தற்கே எச்சட்டம் தடுக்க வரும்? நெருப்பில் வேகும்! என்அன்னைத் தமிழ்மக்கள் அமைத்தார் கோயில் எவன்தடுப்பான் தமிழ்உரிமை? கால்கள் போகும்! என்மக்கள் ஏமாறி வாழ்க்கை தந்தால் என்மொழியை உதைக்கின்றார் வாழ்க்கை சாகும்! சமற்கிருதம் எனச்செய்த மொழியை என்றும் சரியாகப் பேசியவர் எவரு மில்லை சமற்கிருதப் பிணந் தூக்கிப் பணத்தைஎண்ணிச் சமயத்தால் மேலேறிச் சாதி செய்தோர் நமக்குள்ளே வேற்றுமைத் தீ மூட்டிவிட்டார் நம்மவரே சமற்கிருதம் தூக்க லானார் சமற்கிருதம் செத்தமொழி…

தனித்தமிழ் இயக்கம் – சிலப்பதிகார விழா

  தனித்தமிழ் இயக்கம் ஆனி 16, 2045 – 30.6.2014 அன்று மாலை சிலப்பதிகார விழா ஒன்றை அதன் தலைவர் தனித்தமிழறிஞர் முனைவர் க.தமிழமல்லன் தலைமையில் நடத்தியது. தமிழ்த்தென்றல் வரவேற்புரை வழங்கினார். திருவாட்டி த.தமிழ்இசைவாணி செயல்அறிக்கை படித்தார்.   தூ.சடகோபன், நா.அப்பாத்துரை, முதலியோர் முன்னிலையில் அவ்விழா புதுவை வேல்.சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடைபெற்றது.   திருவள்ளுவர் படத்தையும் மறைமலையடிகள் படத்தையும் கடலூர் மாவட்ட நூலகஅலுவலர் திருவாட்டி பெ.விசயலட்சுமி அவர்கள் திறந்துவைத்துப் பேசினார்.   சட்டமன்ற உறுப்பினர் ஆ.அசோக்ஆனந்து, வாழ்த்துரை வழங்கினார்.   ‘கற்பைப் போற்றிய…