த.தமிழ்ச்செல்வி – க.தமிழமல்லன் மணிவிழா
‘வெல்லும் துாயதமிழ்’ மாத இதழ் ஆசிரியர் த.தமிழ்ச்செல்வி – தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் மணிவிழாவைக் க.ப.அறவாணர் நடத்தி வைத்தார். முனைவர் தாயம்மாள் அறவாணர் வாழ்த்துரை வழங்கினார். இசைஞர் முருகேச கந்தசாமி வாழ்த்துப்பா பாடினார். த.தமிழ்நேயன், ச.கலைமதி ,செனித் இனியா ஆகியோர் தமிழ் உணர்வுப் பாடல்களைப் பாடினர். முன்னதாக அனைவரையும் ஆசிரியை த.தமிழ்க் கொடி வரவேற்றுப் பேசினார். இம்மணிவிழா குயவர்பாளையம் மகிழ்ச்சி(போன்சிழார்) உணவகத்தில் நடைபெற்றது. மாண்புமிகு முதல்வர் ந.அரங்கசாமி அவர்கள் தமிழ்ச்செல்வி முனைவர் க.தமிழமல்லன் இணையரை வாழ்த்தினார்.
புதுச்சேரியில் வீடுதோறும் திருக்குறள் இயக்கம்
தனித்தமிழ் இயக்கமும் புதுவைத் திருக்குறள்மன்றமும் இணைந்து வீடுதோறும் திருக்குறள் அன்பளிப்பாகத் தரும் முயற்சியில் 2047 மாசி / கும்பத்திங்கள் 11ஆம் (23.2.2016) நாளில் ஈடுபட்டன. தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன், புதுவைத் திருக்குறள் மன்றத்துணைத்தலைவர் கலைமாமணி சுந்தர.இலட்சுமி நாராயணன், வெல்லும் தூயதமிழ் ஆசிரியர் திருவாட்டி த.தமிழ்ச்செல்வி, தனித்தமிழ் இயக்கப் புரவலர் கி.கலியபெருமாள், தூ.சடகோபன் முதலியோர் அப்பணியில் ஈடுபட்டனர். புதுச்சேரிச் சிவாசி நகரில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இப்பணியை வரவேற்றனர்.
மீதிநாள் மீட்சிநாள் ஆவதே சிறப்பு! – க.தமிழமல்லன்
மீதிநாள் மீட்சிநாள் ஆவதே சிறப்பு! அடிமையில் வீழ்ந்து நிலை தடுமாறி அழிவினை விரும்பிடும் தமிழ்நாடே! – நீ மிடிமையில் உழன்றே மீள்நினை வின்றி மிகநலிந் தால்எவர் மீட்பாரே? உரிமையை இழந்தாய் உயர்வுகள் துறந்தாய்! நரிமையின் காலடி வீழ்ந்தாய் – உன் சரிவுகள் நீக்கும் சான்றவர் உளரோ சடுதியில் சேர்ந்தெழுந் தார்க்கு? கட்சியில் புகுந்தாய் காட்சியில் நெளிந்தாய் களம்காணும் மறத்தினை இழந்தாய் – நீ காசுக்குப் பறந்தாய் கவர்ச்சிக்குக் குனிந்தாய்! கடைத்தேற்றும் காவலைத் துறந்தாய்! சாதியில் புரண்டாய் மதங்களை மறைத்தாய் பாதியில் உன்போக் கொழிந்தாய்!…
வெல்லும் தூயதமிழ் 22 ஆம் ஆண்டுவிழா
மாசி 22, 2046 / மார்ச்சு 06,2015 புதுவைத் தமிழ்ச்சங்கம்
தனித்தமிழ்ச் சிறுவர் பாடல் போட்டி
தனித்தமிழ் இயக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுவர் பாடல் போட்டி முதற்பரிசு 500 உருவா; 2ஆம் பரிசு 300 உருவா; 3ஆம் பரிசு 200 உருவா. நெறிமுறைகள் : நடுவர்களின்தீர்ப்பே இறுதியானது பிறமொழிச்சொற்கள்கலவாத தனித்தமிழில், பாடல்கள் அமைந்திருத்தல் வேண்டும். பாடல்கள்அறிவியல், விளையாட்டு, பகுத்தறிவு முதலிய பாடுபொருள்களைக் கொண்டு எளிமையாக இருத்தல் வேண்டும். இதுவரைவெளிவராத பாடல்களை மட்டுமே போட்டிக்கு அனுப்ப வேண்டும் பாடல்கள்தாளின் ஓருபக்கம் மட்டும் இருத்தல் வேண்டும். தாளின் பின்பக்கம் எதுவும் எழுதுதல் கூடாது. பாடல்களின்2 படிகளைக் கட்டாயம் அனுப்புக. ஒரு படியில் மட்டும் பெயர் முகவரி இருக்கலாம். இன்னொரு படியில் பெயர் போன்றவை இல்லாமல் வெறும் பாட்டு மட்டுமே இருத்தல் வேண்டும். 7. பாடல் ஆசிரியரின் ஒளிப்படம் இணைக்க வேண்டும். 8. தழுவல், மொழிபெயர்ப்புகள்ஏற்கப்படா. 9. தேர்ந்தெடுக்கும்பாடல்கள் ‘வெல்லும் தூயதமிழ்’ மாத இதழில் வெளிவரும் 10. வெல்லும் தூயதமிழ்சிறுவர்பாடல் சிறப்பிதழ் விலை உருவா 20.00. விருப்பம் உள்ளவர்கள் தொகை அனுப்பலாம். போட்டி முடிவுகள் மார்ச்சு 2015 இல் வெளிவரும். இப்போட்டிக்கான பரிசுகளை வழங்குபவர் : தமிழ்மாமணி மா.தன.அருணாசலம், புதுச்சேரி. பாடல்களை அனுப்பவேண்டிய முகவரி : முனைவர் க. தமிழமல்லன், தலைவர், தனித்தமிழ் இயக்கம், தொ.பே : 0413-2247072, 97916 29979 66, மாரியம்மன் கோயில்தெரு, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி-605009 படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் : மாசி 8, 2046 / பிப்ரவரி…