கார்த்திகை மாதம்..கனவுகள் ஊர்வலம் போகும் மாதம்! – மு.வே. (இ)யோ
இது மாவீரர் மாதம் கார்த்திகையில்.. கடலடிக்கும்..ஓசை.. காதைப் பிளக்கும்.. வாடைக் காற்றில் பனை ..அடித்து மேளங்கள் கொட்டும்.. விளை நிலங்கள் எங்கும்.. தினை வெடித்துப் பறக்கும்.. சம்பா நெற்கதிர்கள்.. தலை சாய்த்து -புலி வீரர்களை வணங்கும்.. இளங் குமரி.. வடலியிலே.. ..காகங்கள் அமர்ந்திருந்து.. கட்டிய முட்டிகளில்.. கள்ளடித்து.. ..மயங்கி.. புல்லரிக்கும் ..பாடல்களை பாடும்….! கருவேல மரங்களும்.. முல்லைகளும் முருங்கைகளும்.. தெருவோர வாகை மரங்களும்.. முள் முருக்கைகளும் .. பொன்னலரிச் செடிகளும் பெரு மழையைக் கண்டு.. நாணி..நெளிந்து..நடனம் ஆடிக்.. காதலால்.. சிலிர்த்து.. தழைத்து..மகிழ்ந்து.. பூக்களைச் சொரியும்…