மூடுவிழாவை நோக்கி வெளிப்பாளையம் அஞ்சல்நிலையம்
மூடுவிழாவை நோக்கி வெளிப்பாளையம் அஞ்சல்நிலையம் நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினத்தில் பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்புறம் நீதிமன்ற வளாகத்தில் அஞ்சலகம் உள்ளது. இப்பகுதியில் உள்ள வழக்கறிஞர்கள், புகார்தாரர்கள் தங்கள் குறைகளை அரசுக்குத் தெரியப்படுத்தும் விதத்தில், தங்கள் குறைகளை அரசு களையும் என்ற நம்பிக்கையில் பதிவு அஞ்சலில் தங்கள் கடிதங்களை அனுப்பி வருகின்றனர். இவ்வாறு அனுப்பச் செல்கின்ற பொதுமக்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரிடம், “இங்கு பதிவஞ்சல் அனுப்ப முடியாது. தலைமை அஞ்சலகம் அல்லது மற்ற அஞ்சலகங்களுக்குச் சென்று அனுப்புங்கள்” எனக்கூறுவதும், பொதுமக்களை ஒருமையில் பேசுவதும் அஞ்சலகப் பணியாளர்களின்…