வடக்கில் நிலைகொண்டுள்ள படையினர் உடனடியாக வெளியேறவேண்டும் என்று வலியுறுத்தி வடக்கிலுள்ள மாவட்டங்களின் இளைஞர்கள்,  இளம்பெண்கள் ஒன்றுசேர்ந்து வவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரை நேற்று நகரும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள கலை மண்டபத்தில் தங்கியுள்ள படையினருக்கு எதிராக இன்று முற்பகல் 9 மணிக்கு இந்தப் போராட்டம்  தொடங்கப்பட்டது. அங்கிருந்து இந்தப் போராட்டம் ஓமந்தை, திருவையாறு, பரவிப்பாஞ்சான், கிளிநொச்சி, இயக்கச்சி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம், வழியாகக் காங்கேசன்துறையைச் சென்றடைந்தது.  பேருந்தில் பயணித்த போராட்டக்காரர்கள் ஒவ்வோர் இடத்திலுமுள்ள படைமுகாம்களுக்கு முன்னாலும் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்….