வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் – 2022/23 (வெள்ளணி நாள் அறிவிப்பு)
வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் – 2022/23 (வெள்ளணி நாள் அறிவிப்பு) வீறுகவியரசர் முடியரசனாரின் பாடல்கள் பகரும் செய்தியை நெஞ்சில் இருத்தி, பல்வேறு தளங்களில் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்குப் பங்களிப்பது இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும். வீறுகவியரசர் முடியரசனாரின் 103ஆம் வெள்ளணி நாளான அக்டோபர் 7, 2022 அன்று mudiyarasan.org வலைத்தளம் தொடங்கி வைக்கப்பட்டு வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் திட்டம் அறிவிக்கப்பட்டது. அது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி: தமிழின் பெருமையையும் முதன்மையையும் தன்னிகரில்லா வகையில் முன்னிறுத்திப் பாடிய முதுபெருங்கவி வீறுகவியரசர் முடியரசனார் ஆவார். தம்மொழியின் மாண்புணராத் தமிழர் நிலைகண்டு அவர் துன்புற்று வாடினார்;…
அறிஞர் அண்ணா அவர்கள் மீது பாடிய வெள்ளணி நாள் விழா வாழ்த்து
– பைந்தமிழ்ப் பாவலர் அ.கி.பரந்தாமனார் திருமணக்கும் கலைமணக்கும் திருத்தொண்டை நாட்டில் சிறப்புமிகப் பெற்றிலங்கும் திருக்காஞ்சி நகரம் பெரும்புகழை எய்திடவே பிறந்த பேரறிஞ, பிறர் இகழ்ச்சி தனை மறக்கும் பெருஞ்சால்பு மிக்கோய், ஒரு கடவுள் உளத்திருத்தி உறுமூடக் கருத்தை ஒழித்துவிடப் பாடுபடும் ஒப்பரிய தொண்ட, இருங்கடல்சூழ் இவ்வுலகில் நீடுழி வாழி! எழுத்தாள! அண்ணாவே, நீடுழி வாழி! இந்தி வந்து புகுவதனால் இனிய தமிழ் சாகும் என்றறிஞர் பெருமக்கள் எடுத்தெடுத்துச் சொலினும் அந்த இந்தி வெறியாளர் அதுபுகுந்து சிறக்க ஆனபல வழிமிகவும் ஆற்றுவது கண்டே அந்த நிலை…