கமலின் கருத்திற்கு நிதியமைச்சர் பன்னீர்செல்வம் கண்டனம்!
இயற்கைப் பேரழிவு தொடர்பான கமலின் கருத்திற்கு நிதியமைச்சர் பன்னீர்செல்வம் கண்டனம்! நடிகர் கமல்ஃகாசன், இயற்கைப் பேரழிவு தொடர்பான கருத்தில் வரிப்பணங்கள் எங்கே செல்கின்றன எனக் கேட்டுத் தமிழக அரசைக் குறைகூறியிருந்தார். இதுகுறித்து நிதி – பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்ட அறிக்கையில், பின்வருமாறு தெரிவித்துள்ளார். கடந்த 100 ஆண்டு காலம் கண்டிராத கன மழை வெள்ளத்தால் தத்தளித்து தவிக்கின்ற சென்னை மாநகரம் மற்றும் ஏனைய மாவட்டமக்களைக் காப்பாற்றி, மீட்பு, துயர்துடைப்பு, சீரமைப்பு எனும் முப்பரிமானத்தில், போர்க்கால நடவடிக்கை என்பதற்கும் மேலான…